சென்னை மற்றும் லக்னோ நகரங்கள் இந்தியாவின் வீட்டு சமையல்
சென்னை மற்றும் லக்னோ நகரங்கள் இந்தியாவின் வீட்டு சமையல்
தலைநகரங்களாக முன்னணியில் உள்ளன என்று கோத்ரெஜ் இன்டீரியோ நிறுவனத்தின் 'ஹோம்ஸ்கேப்ஸ்' ஆய்வு வெளிப்படுத்துகிறது
ஹோம்ஸ்கேப்ஸ் இன் ஆய்வு, சமையல் செய்தல் மற்றும் உண்ணுதல் பற்றிய கண்ணோட்டங்களில் உள்ள வேறுபாடுகளை வெளிப்படுத்துகிறது
சென்னை, ஜூலை 25, 2024 - கோத்ரேஜ் எண்டர்பிரைசஸ் குழுமத்தின் ஒரு பகுதியான கோத்ரேஜ் & பாய்ஸ் நிறுவனத்தின் ஒரு முன்னணி வீடு மற்றும் அலுவலக தளபாடங்கள் வணிக நிறுவனமான இன்டீரியோ, இந்தியாவின் சமையல் பழக்கவழக்கங்கள் மற்றும் சமையலறை ஆரோக்கியம் பற்றிய சுவாரஸ்யமான நுண்ணறிவுகளை அதன் சமீபத்திய 'ஹோம்ஸ்கேப்ஸ்' ஆய்வின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் லக்னோ நகரங்கள் வீட்டு உணவு வகைகளுக்கு சிறந்த புகலிடமாக உருவெடுத்துள்ள நிலையில், குறிப்பாக நகரங்களில் உள்ள சுவாரசியமான குறிப்பிடத்தக்க போக்குகளை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
லக்னோவில் 31% மற்றும் சென்னையில் 28% என பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் தங்கள் சமையலறைகள் மற்றும் உணவருந்தும் அறைகளை உணவுப் பரிசோதனைக்கான முதன்மை இடமாகக் கருதுவதாக இந்த கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கோத்ரெஜ் உணவுப் போக்குகள் அறிக்கை 2024 Godrej Food Trends Report 2024 இல் கணிக்கப்பட்டுள்ளபடி, வீட்டில் தயாரிக்கப்பட்ட, உண்மையான, அரைக்கப்பட்ட மசாலாக்கள் மற்றும் வாசனை மசாலாப் பொருட்களுக்கான வளர்ந்து வரும் விருப்பத்துடன் இந்தப் போக்கு ஒத்துப்போகிறது. பங்கேற்பாளர்களில் கணிசமான சதவீதத்தினர் குடும்ப சமையல் பழக்கவழக்கங்களை மீண்டும் கொண்டு வர விரும்புகின்றனர். லக்னோ மற்றும் சென்னையில் முறையே பதிலளித்தவர்களில் முறையே 41% மற்றும் 37% பேர், குடும்பத்துடன் உணவு தயாரித்தல் மற்றும் குடும்ப சமையல் குறிப்புகளைப் பகிர்ந்துகொள்வது போன்ற பாரம்பரியத்தை மீண்டும் கொண்டு வருவது மிகவும் முக்கியம் என்று கருதுகின்றனர். பதிலளித்தவர்களில் 70% பேர் இந்த நடைமுறையை வளர்க்க விரும்புவதால், ஹைதராபாத் இந்த போக்கை நோக்கி வலுவான விருப்பத்தை வெளிப்படுத்துகிறது.
பதிலளித்தவர்களில் 73% பேர் திறந்த சமையலறை யோசனைகள், சமையலையும், உணவருந்துவதையும் அதிக பங்கேற்புடன் ஆக்குவதாகக் கருதுவதால், ஹைதராபாத் நகரம் இந்த யோசனைகளை ஏற்றுக்கொள்வதில் முன்னணியில் உள்ளது. பதிலளித்தவர்களில் முறையே 59% மற்றும் 54% இந்த யோசனைக்கு ஆதரவாக உள்ளதன் மூலம், இந்த போக்குக்கு சென்னை மற்றும் லக்னோ நகரங்களும் வலுவான ஆதரவைக் வெளிப்படுத்துகின்றன. சுவாரஸ்யமாக, சென்னை மற்றும் லக்னோ நகரங்கள் வெவ்வேறு வழிகளில், குறிப்பாக டைனிங் டேபிளில் தங்கள் சமையல்சார் ஈடுபாட்டைக் காட்டுகின்றன. இந்த நகரங்களில், சென்னையின் பதிலளித்தவர்களில் 60% பேரும், லக்னோவின் 53% பேரும், குடும்ப உணவிற்கு ஒரு நகைச்சுவையான தொடுதலைக் கொண்டு வருகின்ற வகையில், இருக்கை ஏற்பாடுகள் குறித்து கலகலப்பான விவாதங்களை அனுபவிக்கின்றனர். பதிலளித்தவர்களில் 36% பேர் அத்தகைய உணவு நேர உரையாடல்களில் பங்கேற்கின்றதன் மூலம், ஹைதராபாத் நகரம், சமையலறை வடிவமைப்பு விருப்பத்தேர்வுகளில் முன்னணியில் இருக்கின்ற அதேவேளையில் டேபிளில் ஒரு வித்தியாசமான விறுவிறுப்பைக் காட்டுகிறது.
கொல்கத்தா நகரம் ஒரு ஈர்க்கின்ற மாறுபாட்டை வழங்குகிறது. வீட்டில் உணவு உண்பவர்களின் விகிதமானது (24%) தேசிய சராசரிக்கு (25%) அருகில் இருக்கின்ற அதே வேளையில் இந்த நகரம், சமையல் செய்தல் மற்றும் உண்ணுதல் நடவடிக்கைகள் இரண்டிலும் குறைந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது. வாழும் பகுதிகளை கவர்ச்சிகரமானதாக வைத்திருக்க, கொல்கத்தாவில் இருந்து பதிலளித்தவர்களில் ஒரு குறிப்பிடத்தக்க 83% பேர் தனி சமையலறைகளை விரும்புவதாகக் கூறினர்.
இந்த கண்டுபிடிப்புகள் குறித்து, கோத்ரேஜ் இன்டீரியோ நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரும், வணிகத் தலைவருமான ஸ்வப்னீல்நகர்கர் கருத்துத் தெரிவிக்கையில், “ இந்த ஹோம்ஸ்கேப்ஸ் ஆராய்ச்சியானது தனிநபர்கள் தங்கள் சமையலறைகள் மற்றும் உணவருந்தும் இடங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆழ்ந்த உணர்ச்சிப் பிணைப்பை எடுத்துக்காட்டுகிறது. எங்கள் நுண்ணறிவுகள், மக்கள் தங்கள் சமையலறைகள் மற்றும் உணவருந்தும் இடங்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதைப் பிரதிபலிக்கின்ற வகையில், நகரங்களில் உள்ள பல்வேறு சமையல்சார் பழக்கங்களை வெளிப்படுத்துகின்றன. கோத்ரேஜ் இண்டீரியோ நிறுவனத்தில், வீடுகள் சமையல்சார் படைப்பாற்றல், குடும்பப் பிணைப்பு ஆகியவற்றின் மையமாக இருப்பதை உறுதிசெய்கின்ற மற்றும் இந்திய குடும்பங்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு திறந்த-கருத்தமைவு சமையலறைகள் முதல் பல்நோக்கு உணவருந்தும் பகுதிகள் வரை இந்த அனுபவங்களை மேம்படுத்துகின்ற தளபாடங்களை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். "என்று கூறினார்.
பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை மற்றும் லக்னோ உட்பட ஏழு நகரங்களில் வசிக்கும் 2822 இந்திய தனிநபர்களிடம் இந்த "ஹோம்ஸ்கேப்ஸ்" ஆய்வு நடத்தப்பட்டது.
Comments
Post a Comment