ஆதித்யா பிர்லா குழுமம் நகை வணிகத்தை துவங்கியதன் மூலம் நுகர்வோர் ஈடுபாட்டை அதிகரிக்கிறது
ஆதித்யா பிர்லா குழுமம் நகை வணிகத்தை துவங்கியதன் மூலம் நுகர்வோர் ஈடுபாட்டை அதிகரிக்கிறது
அதி நவீன நகை வணிகத்தை உருவாக்க ரூ.5000 கோடி முதலீட்டை ஒதுக்குகிறது
குழுமத்தின் ஜூவல்லரி பிராண்டான இன்ட்ரியா, முதல் மூன்று தேசிய போட்டியாளர்களுள் ஒருவராக இருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது
சென்னை, ஜூலை 26, 2024: ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் திரு. குமார் மங்கலம் பிர்லா, வேகமாக விரிவடைந்து வரும் ரூ.6.7 லட்சம் கோடி இந்திய நகைச் சந்தையில் குழுமத்தின் முன்னெடுப்பைக் குறிக்கின்ற வகையில், குழுமத்தின் சில்லறை நகை வணிகத்தின் துவக்கத்தை இன்று அறிவித்தார். இந்த குழுமம் அதன் வலுவான பிராண்ட் ஈக்விட்டி மற்றும் ஆழமான சந்தை நுண்ணறிவுகளை பயன்படுத்துகின்ற அதன் நுகர்வோர் போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்துகிறதினால், இந்த மூலோபாய நடவடிக்கை மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இன்ட்ரியா என்ற பிராண்டின் கீழ் தொடங்கப்பட்ட இந்த ஜூவல்லரி நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் முதல் மூன்று சில்லறை நகை விற்பனையாளர்கள் வரிசையில் ஒரு இடத்தைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் சில்லறை நகை வணிகத்தில் புரட்சியை ஏற்படுத்துகின்ற ஆதித்யா பிர்லா குழுமத்தின் உறுதிப்பாட்டை முக்கியப்படுத்திக்காட்டுகின்ற இந்த இலட்சிய முயற்சிக்கு ஒரு முன்னோடியில்லாத வகையில் ரூ. 5,000 கோடி முதலீட்டில் ஆதரவளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிமுகம் குறித்து, ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் திரு. குமார் மங்கலம் பிர்லா கருத்துத் தெரிவிக்கையில், “இந்திய நுகர்வோர் விரைவாக வளர்ந்து வருகின்றனர், மேலும் இந்தியா உலகளவில் ஒருவேளை மிகவும் நம்பிக்கைக்குரிய நுகர்வோர் கூட்டாளராக இருக்கலாம். இந்த ஆண்டு, பெயிண்ட் மற்றும் ஜுவல்லரி வணிகத்தில் இரண்டு பெரிய புதிய நுகர்வோர் பிராண்டுகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், இந்திய நுகர்வோரின் முனைப்புடைமைக்கு நாங்கள் அதிக அதிகமாக முதலீடு செய்துள்ளோம். முறைசாரா துறைகளில் இருந்து முறையான துறைகளுக்கு தொடருகின்ற மதிப்பு இடம்பெயர்வு, வலுவான, நம்பகமான பிராண்டுகளுக்கான அதிகரித்து வரும் நுகர்வோர் விருப்பம் மற்றும் எப்போதும் வளர்ந்து வரும் திருமண சந்தை ஆகியவை நகை வணிகத்தில் நுழைவதற்கான ஒரு கவர்ச்சியான வாய்ப்பாக அமைகின்றன." அவர் மேலும் கூறுகையில், “இந்த முன்னெடுப்பானது, 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஃபேஷன் சில்லறை விற்பனை மற்றும் கலாச்சார தொழில் துறையில் இருந்துவரும் குழுமத்தின் ஒரு இயற்கையான விரிவாக்கம் ஆக இருக்கிறது. சில்லறை விற்பனை, வடிவமைப்பு மற்றும் பிராண்ட் மேலாண்மை ஆகியவற்றில் நாங்கள் உருவாக்கிய இந்த வலுவான நிபுணத்துவங்களால் எங்கள் வெற்றி ஆதரிக்கப்படும்."என்றார்.
டெல்லி, இந்தூர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய மூன்று நகரங்களில் இன்ட்ரியா ஒரே நேரத்தில் நான்கு விற்பனைக்கூடங்களைத் திறக்க திட்டமிட்டுள்ளது. ஆறு மாதங்களுக்குள் 10 க்கும் அதிகமான நகரங்களுக்கு விரிவுபடுத்துவது எங்கள் திட்டம் ஆகும். தேசிய பிராண்டுகளின் சராசரி அளவை விட 30% முதல் 35% பெரிய, 7000 சதுர அடிக்கு மேல் உள்ள இந்த பெரிய விற்பனைக்கூடங்கள், நிகழ்ச்சிகளை உள்ளடக்குகின்ற ஒரு விரிவான வரம்பைக் கொண்டிருக்கும். இந்த பிராண்ட் 5,000 தனித்துவமான வடிவமைப்புகளுடன், கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15000 நகைகளின் ஒரு பெரிய ஆரம்ப வகைப்படுத்தலை வழங்கும். இந்திய நுண் நகைச் சந்தையில் சந்தை சுழற்சிக்கான விவேகமான யோசனையைக் குறிக்கின்ற வகையில் ஒவ்வொரு 45 நாட்களுக்கும் புதிய கலெக்ஷன்கள் அறிமுகப்படுத்தப்படும்.
நாவல் ஜூவல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் திரு. திலீப் கவுர் கூறுகையில், "இன்ட்ரியா மூலம், படைப்பாற்றல், அளவு, தொழில்நுட்பம் மற்றும் நகைத் துறையில் வாடிக்கையாளர் அனுபவம் ஆகியவற்றில் தரநிலைகளை மறுவரையறை செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். ஒவ்வொரு நகையும் கைவினைத்திறனின் ஒரு தனித்துவமான வரலாற்றை பேசுகிறது என்ற புரிதலின் அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த தனித்துவமான தயாரிப்பு, விதிவிலக்கான வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய வாங்கும் செயல்முறை ஆகியவை இறுதியில் நகைகள் வழியாக சுய வெளிப்பாட்டை வெளிப்படுத்த உதவுபவைகளாக இருக்கின்றன. எங்கள் தயாரிப்பு நவீன வடிவமைப்புகளுடன் காலமற்ற கைவினைத்திறனை ஒருங்கிணைக்கிறது. எங்களின் பிராந்தியத் தெரிவு, பல்வேறு கலாச்சார சூழல்கள் மூலம் அவற்றைக் கண்டறிய அனுமதிக்கும் அதே வேளையில், தனித்துவமான பின்னணிகளை எடுத்துக்காட்டுகிறது."என்று கூறினார்.
நாவல் ஜூவல்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. சந்தீப் கோஹ்லி கூறுகையில், "நகைகள் ஒரு வகையாக வெறும் முதலீட்டில் இருந்து வசீகரிப்பவையாக மாறி வருகிறது. எங்கள் முன்மொழிவானது, உணரக்கூடிய வேறுபாடு, தனித்துவமான வடிவமைப்புகள், தனிப்பயனாக்கப்பட்ட சேவை மற்றும் உண்மையான பிராந்திய நுணுக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. பிரத்யேக ஓய்வறைகளுடன் கூடிய புதுமையான தனித்துவமான அனுபவமே இன்ட்ரியா வின் வழங்கலின் மையமாக உள்ளது. விற்பனையகத்தில் உள்ள ஒப்பனையாளர்கள் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த நகை ஆலோசகர்களுடன் கூடிய தனிப்பயனாக்குதல் சேவைகள் ஐம்புலன்களையும் உயர்த்தி, இணையற்ற ஷாப்பிங் பயணத்தை உருவாக்குவதற்கு உறுதியளிக்கிறது. எங்களின் வகுப்பில் சிறந்த டிஜிட்டல் பயனர் இடைமுகம், டிஜிட்டல் மற்றும் நேரடி தொடர்பிடங்கள் முழுவதும் ஒரு தடையற்ற அனுபவத்தை உருவாக்கும் மற்றும் நகை சில்லறை விற்பனையில் புதிய யுகத்தை வெளிப்படுத்தும்."என்று கூறினார்.
சமஸ்கிருதத்தில் அதன் மூலத்தைக் கொண்டுள்ள 'இன்ட்ரியா' என்ற பிராண்ட் பெயர் ஆனது, இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இன்ட்ரியா என்பது ஐந்து புலன்களுக்கும் செய்யும் ஒரு மரியாதையாக இருக்கிறது. ஒருவரின் இருப்பு மற்றும் உணர்வை வரையறுக்கின்ற அனைத்து ஐம்புலன்களையும் தூண்டி மகிழ்விக்கும் நகைகளை உருவாக்கும் பிராண்டின் தத்துவத்தை இந்தப் பெயர் பிரதிபலிக்கிறது. இன்ட்ரியா வின் பிராண்ட் சின்னமான ஒரு பெண் மான், புலன்களுக்கு ஒரு சக்திவாய்ந்த உருவகமாக செயல்படுகிறது மற்றும் ஒரு பெண்ணின் அழகையும் கருணையையும் எடுத்துக்காட்டுகிறது. இந்த சின்னம் நகைகளை உருவாக்குவதற்கான பிராண்டின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது, அது அணிபவரை அலங்கரிக்கிறது மாத்திரம் அல்ல அதிகாரம் அளிக்கிறது மற்றும் கொண்டாடுகிறது.
--------------------------------------------------
ஆதித்யா பிர்லா குழுமம் பற்றி:
ஆதித்யா பிர்லா குழுமம் 36 நாடுகளில் 187,000 பணியாளர்களுடன் செயல்படுகின்ற ஒரு 65 பில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய குழும நிறுவனமாகும். உலோகங்கள், சிமெண்ட், கார்பன் பிளாக், டெலிகாம், ஃபேஷன் சில்லறை விற்பனை, நிதிச் சேவைகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் ஒரு முக்கிய பங்கேற்பாளராக உள்ளது. நகை சில்லறை விற்பனையில் அதன் சமீபத்திய முயற்சியுடன், இந்த குழுமம் அதன் வலுவான பிராண்ட் ஈக்விட்டி மற்றும் இந்திய நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதலை பயன்படுத்துகின்ற நுகர்வோர் எதிர்கொள்ளும் வணிகங்களில் அதன் இருப்பை தொடர்ந்து விரிவுபடுத்துகிறது.
நாவல் ஜூவல்ஸ் நிறுவனம் பற்றி:
ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஒரு நிறுவனமான நாவல் ஜூவல்ஸ், அதன் பிராண்டான இன்ட்ரியா மூலம் இந்திய நகை விற்பனை சந்தையில் புரட்சி ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024 இல் தொடங்கப்பட்ட இந்த இன்ட்ரியா பிராண்ட், அனைத்து நிகழ்ச்சிகளுக்கும், நவீன வடிவமைப்புகளுடன் பாரம்பரிய கைவினைத்திறனை ஒன்றிணைக்கின்ற ஒரு பரந்த அளவிலான நகைகளை வழங்குகிறது. தரம், புதுமை மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் ஆகியவற்றிற்கான ஒரு அர்ப்பணிப்புடன், இந்தியாவின் ஒழுங்கமைக்கப்பட்ட நகை சந்தையில் இன்ட்ரியா வை ஒரு முன்னணி பிராண்டாக மாற்ற நாவல் ஜூவல்ஸ் விரும்புகிறது.
Comments
Post a Comment