About YWTC (Yes, We Too Can!!!) Charitable Trust:

 ஃபைசெர்வ் மாற்றுத்திறனாளிகளுக்கு திறன்-மேம்பாட்டு திட்டத்தை வழங்குகிறது 

யெஸ் வீ  டூ கேன் உடன் இணைந்து தனிப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அணுகக்கூடிய கல்வி, திறன் மேம்பாடு, அதிகாரம் அளித்தல் ஆகியவற்றை வழங்குகிறது!!! 

20 ஜூலை 2024, சென்னை: நிதிச் சேவைகள் தொழில்நுட்பம், கொடுப்பனவு ஆகியவற்றில் உலகளாவிய முன்னணி நிறுவனமான ஃபைசெர்வ் (Fiserv), யெஸ் வி டூ கேன்!!! (YWTC) என்ற தொண்டு அறக்கட்டளை உடன் கூட்டு சேர்ந்து, நடை இயக்கக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கான ‘லைட்ஸ் கேமரா இன்குலுஷன்’ என்னும் திறன் மேம்பாட்டு திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனமான இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்துடன் (FTII) இணைந்து இந்த ஆண்டு முழுவதும் திரைக்கதை எழுதுதல், போட்காஸ்டிங், ஸ்மார்ட்போன் திரைப்படம் தயாரித்தல், நடிப்பு, டப்பிங் போன்ற பல்வேறு திறன்களில் 120+ பயனாளிகளுக்கு தொழில்முறைப் பயிற்சியை அளித்தது. யுனைடெட் வே மும்பை உடன் இணைந்து ஃபைசெர்வ்-ஆல் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

இந்த முன்முயற்சியில் பங்கேற்பாளர்கள் அனைவரின் அர்ப்பணிப்பு, படைப்பாற்றல் ஆகியவற்றுக்கு ஒரு சான்றாக, இரண்டு குறும்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  அவற்றின் தலைப்புகள் வருமாறு. 'ஸ்ட்ரைட் - பிரேக்கிங் பேரியர்ஸ். எம்ப்ரேஸிங் ஐடின்ட்டிட்டி' மற்றும் 'வென் ஆப்போர்ட்ச்சூனிட்டி நாக்ஸ் ஆன் தி ரெக்குரூட்டர்ஸ் டோர்ஸ்.' சமூகப் பொறுப்பிற்கான ஃபைசெர்வ் உறுதிப்பாட்டின் ஒரு உருவகமாக, இந்தத் திரைப்படங்கள் தனிப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் திறமைகளைக் கொண்டாடுகின்றன. 

இத்திரைப்படக் காட்சிகளின்போது, ஃபைசெர்வ்-இன் குளோபல் சர்வீசஸ் மூத்த துணைத் தலைவர் திரு. கோபகுமார் சுப்ரமணியன் அவர்கள் இவ்வாறு கூறினார், “ஃபைசெர்வ்-இல், எங்கள் பணியிடத்திலும் அதற்கு அப்பாலும் சமபங்கு, அனைவரையும் சேர்த்துக்கொள்ளுதல் ஆகியவற்றுடன் கொண்டாடும் சூழலை உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். இதன் மூலம் ஒவ்வொருவரும் தங்கள் முழுத் திறனையும் உணர முடியும். மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவளிக்கும் எங்கள் முன்முயற்சிகள் பயனாளிகளுக்கு தன்னம்பிக்கையையும் வேலைவாய்ப்பு திறன்களையும் உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் சமூகத்தில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை அளிக்கிறது.”

இந்த முன்முயற்சியானது மாற்றுத்திறனாளிகளுக்கு திரைக்கதை எழுதுதல், திரைப்படத் தயாரிப்பில் மதிப்புமிக்க திறன்களை வழங்குதல் ஆகியவற்றின் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் மூலம் திரைப்படத்துறையில் அவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துகிறது. அழுத்தமான குறும்படங்கள் மூலம், இது மாற்றுத்திறனாளிகளின் இயலாமை பற்றிய சமூகத்தின் கருத்துகளை சவால் செய்கிறது, மற்றும் குறைபாடுகள் உள்ளவர்களின் திறமைகள்,  பங்களிப்புகள் ஆகியவற்றைக் கொண்டாடுகிறது அத்துடன் அதிக அளவில் அனைவரையும் சேர்த்துக்கொள்ளுதல், ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கிறது. பன்முகத்தன்மையை தழுவி, மாற்றுத்திறனாளியாக உள்ள நபர்கள் முக்கிய ஊடகங்களிலும் அதற்கு அப்பாலும் அவர்களின் திறமைகளுக்காக அங்கீகரிக்கப்படும் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை வளர்ப்பதற்கு இத்திட்டம் முயற்சி செய்கிறது.

”லைட்ஸ் கேமரா இன்குலுஷன் திட்டத்தில் எங்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்பாளர்களின் சாதனைகள் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த முன்முயற்சி அவர்களின் திறமையையும் அனைவரையும் உள்ளடக்கும் சக்தியையும் கொண்டாடுகிறது. இந்த முன்முயற்சியை சாத்தியமாக்குவதில் அக்கறையுடன் ஆதரவளித்த ஃபைசெர்வ், எஃப்டிஐஐ, யுனைட்டெட் வே மும்பை ஆகிய நிறுவனங்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்" என்று ஒய்டபுள்யூடிசி (YWTC) தொண்டு அறக்கட்டளையின் தலைவர் மாதவி லதா பிரதிகுடுபு அவர்கள் கூறினார்.




About YWTC (Yes, We Too Can!!!) Charitable Trust:

YWTC Charitable Trust empowers Persons with Disabilities (PwDs) through sports and arts, believing these fields foster individual development and community inclusion. The Trust supported the formation of the Paralympic Swimming Association of Tamil Nadu and the Wheelchair Basketball Federation of India, helping over 1,000 PwDs engage in sports. 

About Fiserv:

Fiserv, Inc. (NYSE: FI), a Fortune 500 company, aspires to move money and information in a way that moves the world. As a global leader in payments and financial technology, the company helps clients achieve best-in-class results through a commitment to innovation and excellence in areas including account processing and digital banking solutions; card issuer processing and network services; payments; e-commerce; merchant acquiring and processing; and the Clover® cloud-based point-of-sale and business management platform. Fiserv is a member of the S&P 500® Index and has been recognized as one of Fortune® World’s Most Admired Companies™ for 9 of the last 10 years. Visit fiserv.com and follow on social media for more information and the latest company news.


***


Comments

Popular posts from this blog

Trisha Krishnan (Actress)- Biography

Apollo Cancer Centres Collaborates With Accuray to Launch Indian Sub Continent's First Robotic Stereotactic Radiosurgery Program

Boult's Launches Klarity Series

காம்பஸ் குரூப் இந்தியா மூலம், FSSAI இன் ஈட் ரைட் கேம்பஸ் சான்றளிப்பை கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் பெற்றுள்ளது

Emcure Pharmaceuticals launches Arth

தனுஷின் 41 வது பிறந்த நாளில் அவரது குறிப்பிடத்தக்க திரைப்பட வாழ்க்கையை ஏர்டெல் Xஸ்ட்ரீம் பிளேயில் (Airtel Xstream Play) கொண்டாடுங்கள்

MGM Healthcare Performs Historic Back-to-Back Heart and Lung Transplants ~ Dr. KR Balakrishnan and team have performed four heart and one dual lung transplant within 30 hours. Chennai,

5 Myths About Women’s Infertility

Nxtra by Airtel joins RE100, commits to becoming a 100% renewable energy data centre company

Your Favorite Toon Is Making His Way To Your City: Shin Chan And Sony YAY! Bring Fun To Chennai