மதுரைக்கு வருகிறது மெக்டொனால்ட்ஸ் இந்தியா

மதுரைக்கு வருகிறது மெக்டொனால்ட்ஸ் இந்தியா தமிழ்நாட்டின் கலாச்சார தலைநகரில் அறிமுகமாகிறது கோல்டன் ஆர்ச்சஸ் நிறுவனம். சென்னை: தமிழ்நாட்டின் கலாச்சார தலைநகரான மதுரையில் தனது முதல் உணவகத்தைத் தொடங்கியுள்ளது மெக்டொனால்ட்ஸ் இந்தியா (மேற்கு மற்றும் தெற்கு). எதிர்கால அனுபவத்தைத் தரும் (EOTF) இந்தப் புதிய கடை, வியூக முக்கியத்துவம் வாய்ந்த சக்தி வேலம்மாள் சாலையில் அமைந்துள்ளது. மெக்டொனால்ட்ஸ் பிரத்யேக அனுபவத்தை இது மதுரைவாசிகளுக்கு வழங்கும். இந்த உணவகத்துடன், தற்போது தமிழ்நாட்டில் 38 மெக்டொனால்ட்ஸ் இந்தியா உணவகங்கள் உள்ளன. இந்த குறிப்பிடத்தக்க மைல்கல், அதன் விஷன் 2027 உத்தியின் ஒரு பகுதியாக நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்களில் முக்கிய தருணத்தைக் குறிக்கிறது. பல நிலைகளைக் கொண்ட இந்தப் புதிய மதுரை உணவகம் சுயமாக ஆர்டர் செய்யும் கியோஸ்க்குகள் (SOK), டிஜிட்டல் மெனு போர்டுகள், டேபிள் சேவை, வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் பல்வேறு ஸ்மார்ட் அம்சங்களைக் கொண்டுள்ளது. மெக்டொனால்ட்ஸ் கிளாசிக் பர்கர்கள், மெக்ஸ்பைசி ஃபிரைடு சிக்கன், மெக்ஸ்பைசி சிக்கன் விங்ஸ் உள்ளிட்ட விரிவான ஃபிரைடு சி...